கோவை: மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தினை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனிமனிதனின் பொறுப்பற்ற செயலால் 17 பேரின் உயிர் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிர் பலியாகியுள்ளது. வெறும் கற்களை வைத்து சிமெண்ட் வைக்காமல் கட்டியுள்ளதாகவும் உரிமையாளரின் வீட்டு கழிவு நீர் சுவர் அருகே விடப்பட்டுள்ளது, இதை நான் தீண்டாமை சுவராக தான் நான் பார்க்கிறேன். மக்கள் சுவற்றை பற்றி சொல்லப்போனால் நாயை விட்டு துரத்தியுள்ளனர் என்று கூறினார்.
குடியிருந்த இடத்திலேயே வீடு கட்டி தந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் எனவும் போராடியவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு, இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தோல் மேல் கைவைத்து நம்பிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் மனித உயிர்களை விட மதில் சுவர் பெரியதா என கேள்வி எழுப்பியவர், இந்த மக்களின் முகத்தை பார்க்கக்கூடாது என சுவரை கட்டியவர்கள் உறுதியாக கட்டியிருக்க வேண்டும் என்றார்.
இது குறித்து ஏற்கனவே புகார்களைத் தெரிவித்தும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் ஏற்ற தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அரசின் இழப்பீடு போதுமானதா ? மனித உயிருக்கு பணம் இழப்பீடு சரிவருமா ? என கேள்வி எழுப்பியவர், போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இறந்தவர்கள் உடல்களை முறையாக அடக்கம் செய்து எரித்திருக்க வேண்டும். ஆனால் அரசு அவசர அவசரமாக அவர்களது உடலை எரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.