சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்; ஒரு வாரத்தில் அரசு வேலை வழங்க வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர்

கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அரசிற்கு அறிவுறித்தியுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அரசிற்கு அறிவுறித்தியுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ராம் சங்கர் காத்தரியா, துணை தலைவர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் வந்த உயிரிழப்பு நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன் பின் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ள நிலையில் ரூ.4 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.6 லட்சம் உடனே வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் சுற்று சுவரின் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சுற்று சுவர் உரிமையாளர் வண்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டதிற்கு, இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின் தெரிவிக்கப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...