கோவை: மேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் சந்தித்து அறிவித்தபடி, அரசு வேலை, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் உள்ளிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற தனி அதிகாரியை நியமித்திட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேட்டுப்பாளையத்தில் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் கோவை வரலாற்றின் கொடுந்துயரமான சம்பவமாகும். இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்றார்.
அதே போல, தமிழக முதலமைச்சர் மேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அறிவித்தபடி பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலை, உயர்த்தி வழங்கியுள்ள பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் இடிந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை கட்டித் தருவது, இதர குடிசை வீடுகளுக்கு மாற்றாக புதிய கான்கிரீட் வீடுகளாக அமைத்து தருவது என்கிற உறுதியை முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு இதற்கென தனி அதிகாரியை நியமித்திட வேண்டும் எனவும் இப்பணிகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தித்தான் தலித் அமைப்பினரும் பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஒரு கொடுமை நிகழ்ந்து, குழந்தைகள், பெண்கள் பலியான சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கோபப்படுவது மனித இயல்பு. இத்தகைய போராட்டம்தான் மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்காக நியாயம் கேட்டுப் போராடியவர்களை தாக்குதல், தடியடி நடத்தி சிறையில் அடைத்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோரிக்கைக்காகப் போராடியவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்ற செயல். ஆகவே எந்தவித நிபந்தனையுமின்றி கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பங்குகொள்வதோடு அவர்களுக்கான நியாயத்தை பெற்றுத்தர உறுதியோடு போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.