அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது - புகழேந்தி

கோவை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவடைந்து விட்டதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவடைந்து விட்டதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.



முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், அமமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் தைரியமும், வீரமும், ஆற்றலையும் எந்த தலைவரிடமும் பார்க்க முடியாது எனவும், ஜெயலலிதா மரணம் இந்திய நாட்டிற்கே பேரிழப்பு எனவும் தெரிவித்தார். அதிமுகவை மிக அதிகமாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளேன் எனவும், அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளேன் எனவும் அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 4 முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது எனவும், 30 வருடங்களாக நிரம்பாத ஏரி, குளங்கள் நிரம்பி பசுமை தயாகமாக தமிழ்நாடு விளங்குவதாக தெரிவித்த அவர், அதிமுக அரசையும், கட்சியையும் காக்க வேறு வழியின்றி முதலமைச்சரையும், ஆட்சியையும் பாராட்டி வருகிறேன் எனவும், மிக விரைவில் அதிமுகவில் இணையும் விழா நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

திமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இல்லை எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவடைந்து விட்டதாக கூறிய அவர், டிடிவி தினகரனை சசிகலா ஆதரிக்க மாட்டார் என்று கூறினார். அமமுக கட்சி பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்தற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததாக தவறான செய்தி வெளியாகியுள்ளது எனவும் வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...