கோவை: கோவையில் வரும் டிசம்பர் 8ம் தேதி ஸ்பெஷல் வாக்கத்தான் என்ற நடைப்பயணத்தை நேரு ஸ்டேடியத்தில் நடத்த கௌமாரம் பிரசாந்தி பள்ளி திட்டமிட்டுள்ளது.

கௌமாரம் பிரசாந்தி பள்ளியானது கடந்த 2006-ம் ஆண்டில் ஒரு தொழில் முறை மருத்துவர் மற்றும் ஒரு உதவியாளருடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று 65 பணியாளர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் கோவையில் மட்டுமன்றி திருப்பூரிலும் ஓர் கிளை 55 குழந்தைகளுடன் சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.
கௌமாரம் பிரசாந்தி பள்ளியானது தொழிற் முறை மருத்துவம், சிறப்புக் கல்வி, பேச்சுப் பயிற்சி, இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், உடற்கல்விப்பயிற்சிகள் மற்றும் உடலியக்க மருத்துவம், ஓவியக்கலைப் பயிற்சி, இசைப்பயிற்சி போன்றவற்றை முறையான பயிற்சியாளர்கள் மூலம் கற்றுக் கொடுத்து வருகிறது.
இப்பயிற்சிகளின் மூலம் உடலளவிலும், மனதளவிலும் பல பயன்களைப்பெற்று நலமுடன் வலம் வரும் பல குழந்தைகள் சமுதாயத்தில் அன்றாட பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இப்பள்ளியின் மாணவ-மாணவியர் சமையல், ‘பிஸ்கட்’ தயாரித்தல் போன்ற வேலைகளையும் திறம்பட செய்து சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கௌமாரம் பிரசாந்தி பள்ளியானது ஒவ்வொரு சிறப்புக் குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அவர்களின் உடலளவு மற்றும் மனதளவிலான சிறப்பு தேவைகளை அனுபவிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்குவதால் இங்குள்ள சிறப்பு குழந்தைகள் அழகான விதத்தில் முன்னேற்றமடைந்து தனது திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். மனனம் செய்தல், குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுதல், தனது வேலைகளை தாமே செய்து கொள்ளுதல் போன்ற திறன்கள் குழந்தைகளிடம் காணப்படும் போது அவர்கள் சிறப்பு தேவைகள் பூர்த்தி அடைந்து “அன்றாடப் பள்ளிகளிலும் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இத்தகைய பெருமைக்குரிய செயலை கடந்த 14 வருடங்களாகவே இச்சிறப்புப்பள்ளி செய்து வருகின்றது.
இந்த நிலையில், ஸ்பெஷல் வாக்கத்தான் என்ற நடைப்பயணம் வரும் டிசம்பர் 8ம் தேதி கோவை மாநகரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் துவங்கி ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியத்தில் முடிவடையும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய ஓர் சமூகப் பணிக்காக அமைக்கப்பட்டிருக்கும் இவ்வமைப்பில் கௌமாரம் பிரசாந்தி பள்ளியுடன் இணைந்து அனைவரும் ஓர் உதவி கரமாகவும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் நபராகவும் கலந்துகொண்டு பெருமை சேர்க்க சமுதாய மக்களின் பெரிதளவு விலான ஆதரவினை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.