கோவை: கோவை அடுத்த சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற மூன்று இளைஞர்களை போலீசார் கடை உரிமையாளர் ஒருவரின் புகாரின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபகாலமாகவே கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வரும் நிலையில் சந்தைகளில் கள்ளநோட்டுகளை மாற்ற முயலுபவர்களை அவ்வப்போது போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சிப்ஸ் கடையில் மூன்று இளைஞர்கள் கள்ள நோட்டுகளை மாற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ரோந்து பணியில் இருந்த சிங்காநல்லூர் போலீசார் மூன்று இளைஞர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ரசல் பிரான்சிஸ் (28), எல்விஸ் பிரான்சிஸ் (23), பாஸ்கர் (35) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இவர்கள் மூன்று கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.