கஞ்சா வழக்கில் கைதான நபர் மீது ஆசிட் ஊற்றி விசாரணை..! போலீசார் மீது பாதிக்கப்பட்ட நபர் புகார்

கோவை: நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான நபரை போலீசார் விசாரணையின் போது ஆசிட் ஊற்றி கொடுமைப்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக கோவையில் தெரிவித்துள்ளார்.


கோவை: நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான நபரை போலீசார் விசாரணையின் போது ஆசிட் ஊற்றி கொடுமைப்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக கோவையில் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (28). இவர் திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி கஞ்சா விற்பனை செய்த வழக்கில் நீலகிரி மாவட்ட தேவாலா காவல் எல்லை போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சிவராஜ், தன்னை கைது செய்த தேவாலா போலீஸார், அடித்து சித்திரவதை படுத்தியதுடன் வயிற்றுக்கு கீழே உள்ள பல உறுப்புகளில் ஆசிட் ஊற்றி மரண வலியை கொடுத்தனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது :-

போலீசார் என்னை கஞ்சா வழக்கில் கைது செய்து காவல் நிலையத்தில் தலைகீழாக கட்டிவைத்து அடித்து உதைத்தனர். அதேபோல, உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் என்னை நிர்வாணப்படுத்தி வயிறு, பிறப்பு உறுப்பு, தொடை, ஆசனப்பகுதி ஆகிய இடங்களில் ஆசிட்டைனை ஊற்றினார். மேலும், மிகவும் கொடூரமாக என்னை சித்திரவதை படுத்தியதை யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டினர்.

எனவே, பாதிக்கப்பட்ட எனக்கு போலீசாரால் மீண்டும் பாதிப்பு வந்துவிடக்கூடாது எனவும் சித்திரவதை படுத்திய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனித உரிமை ஆணையம் மற்றும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...