கோவை: முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை: முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை ஹுசூர் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ஜுனன் தலைமையில் அமைதி ஊர்வலம் சென்றவர்கள், அவினாசி சாலையில் உள்ள அண்ணா,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் அலுவலகத்திலும் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.