கோவை மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்‌

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று(04.12.2019) ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்‌ முன்னேற்பாடுகள்‌ குறித்து மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று(04.12.2019) ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்‌ முன்னேற்பாடுகள்‌ குறித்து மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித்குமார்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ ரமேஷ்குமார்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (உள்ளாட்சி தேர்தல்‌) முத்துக்கருப்பன்‌, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ பழனிச்சாமி, உட்பட கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்குட்டப்ட ஊரக உள்ளாட்சிகளின்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

பின்னர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்‌,

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 27.12.2019 வெள்ளிக்கிழமை மற்றும்‌, 30.12.2019 திங்கட்கிழமை என இரண்டு கட்டங்களாக தேர்தல்‌ நடத்திட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவிகளுக்கு நேரடித்‌ தேர்தல்‌ நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில்‌ மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு), பொள்ளாச்சி(தெற்கு) ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில்‌ 27.12.2019 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவும்‌, காரமடை, அன்னூர்‌, சர்க்கார்சாமக்குளம்‌, பெரியநாயக்கன்பாளையம்‌, சூலூர்‌, தொண்டாமுத்தூர்‌, சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்‌ 30.12.2019 அன்று இரண்டாம்‌ கட்ட வாக்குப்பதிவும்‌ நடைபெற உள்ளது.

தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும்‌ எண்‌ இடப்பட்டுள்ளதையும்‌, வாக்குச்சாவடிகளில்‌ குடிநீர்‌, மின்சாரம்‌, கழிப்பறை வசதி மற்றும்‌ இதர அடிப்படை வசதிகள்‌ உள்ளதையும்‌ உறுதி செய்யவேண்டும்‌. மேலும்‌, வாக்குப்பெட்டிகள்‌, வாக்குப்‌ பதிவிற்கான படிவங்கள்‌, கையேடுகள்‌, இதர உபகரணங்கள்‌ தயார்நிலையில்‌ இருக்கவேண்டும்‌.

வேட்புமனு படிவம்‌ பெறும்‌ நாள்‌ முதல்‌ தேர்தல்‌ நடைபெறும்‌ நாள்‌ மற்றும்‌ வாக்கு எண்ணிக்கை நடைபெறும்‌ நாள்‌ வரை உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்‌. மேலும்‌, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும்‌ வாக்குச்சாவடி பட்டியல்களை காவல்துறைக்கு வழங்க வேண்டும்‌. பதட்டமான வாக்குச்சாவடிகள்‌ மற்றும்‌ மிகவும்‌ பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அப்பகுதிகளில்‌ கூடுதல்‌ பாதுகாப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌. வாக்கு எண்ணிக்கை மையங்களில்‌ அதிவேக இணையதள வசதியுடன்‌ கூடிய தொலைத்தொடர்பு இணைப்பு அமைத்திட வேண்டும்‌. வாக்கு எண்ணும்‌ மையங்களில்‌ தீயணைப்புத்‌ துறை வாகனங்களை தயார்நிலையில்‌ வைத்திருக்கவேண்டும்‌.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில்‌ இருந்து வாக்குச்சாவடிகள்‌, மற்றும்‌ வாக்கு எண்ணும்‌ மையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக வாகனங்களை ஏற்பாடு செய்யவும்‌, சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்‌ மற்றும்‌ வாக்குப்பதிவு அலுவலராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உள்ளாட்சி தேர்தல்‌ பணியில்‌ முழுமையாக ஈடுபடுத்துவதற்கும்‌ தேர்தல்‌ பயிற்சி அளிக்கும்‌ போது தவறாது கலந்து கொள்வதற்கும்‌, வாக்கு எண்ணிக்கை மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை 23.12.2019 அன்றே சம்மந்தப்பட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களிடம்‌ ஒப்படைக்கவும்‌, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்‌ நடத்தை விதிமுறைகள்‌ முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. தேர்தல்‌ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்‌ ஊரக பகுதிகளில்‌ போஸ்டர்‌, பேனர்கள்‌, சுவர் விளம்பரங்கள்‌ ஆகியவற்றை அப்புறப்படுத்த தக்க நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளவேண்டும்‌. தேர்தல்‌ நடத்தை விதிகள்‌ 100 விழுக்காடு பின்பற்றப்படுவதை அலுவலர்கள்‌ உறுதி செய்திடல்‌ வேண்டும்‌ இதற்கு அரசியல்‌ கட்சிகளும்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், அனைத்து தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களும்‌ உள்ளாட்சி தேர்தல்கள்‌ அமைதியாக நடைபெறவும்‌, வெளிப்படையான தேர்தல்‌ நடத்திடவும்‌ நடவடிக்கையினை எடுத்திட வேண்டும்‌, என மாவட்ட ஆட்சியர்‌ /மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...