மேட்டுப்பாளையத்தில் சுற்று சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்; எஞ்சிய சுவரை அகற்றும் பணி துவக்கம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்று சுவர் இடிந்து 17 பேர் உயிரிழக்க காரணமான எஞ்சிய சுவரை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்று சுவர் இடிந்து 17 பேர் உயிரிழக்க காரணமான எஞ்சிய சுவரை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் மாடி வீட்டு சுற்றுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அளவுக்கு அதிகமான 20 அடி உயரத்தில் போதிய பில்லர்கள் அமைக்கப்படாமல் சுவர் எழுப்பியது உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது. மேலும் இந்த சுவர் தீண்டாமை சுவர் எனவே இதனை முழுவதுமாக இடித்து அகற்ற பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தினர்.



இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் சுரேஷ் குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இன்று எஞ்சிய சுவரை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 



20 அடி உயர சுவரை இரண்டு ஜே.சி.பி எந்திரங்களை கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அதே பகுதியில் ஆபத்தாக உள்ள மற்றொரு சுவரும் அகற்ற முற்பட்ட போது, அதற்கு அந்த பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து முதல் கட்டமாக சர்ச்சைக்குரிய சுவற்றை அகற்றும் பணி தொடர்ந்து விரு விருப்பாக அகற்றப்பட்டு வருகிறது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...