கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி பகுதியில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தவர் ராமசாமி என்பவர், கிணற்று நீரினை பயண்படுத்தி இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்து வந்தார்.

வனப்பகுதியினை ஓட்டிய பகுதி என்பதால் தோட்டத்தில் வன விலங்குகள் நுழையாமல் இருக்க தினமும் இரவு காவல் இருப்பது ரங்கசாமியின் வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட வேடர் காலனி வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் இவரது தோட்டத்தினுள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியுள்ளது.
இதனை கண்ட ரங்கசாமி கிணற்றின் அருகே நின்று யானைகளை விரட்ட டார்ச் லைட்டுடன் சத்தமிட்டு யானையைகளை விரட்ட முயற்சித்துள்ளார். அப்போது தொலைவில் இருந்த யானை விவசாயி ரங்கநாதனை விரட்டி வந்து தாக்கியுள்ளது. இதில் அவரது இடது கை முறிந்த நிலையில் விடாமல் யானை தொடர்ந்து தாக்கி அருகில் இருந்த கிணற்றுக்குள் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இன்று ரங்கசாமியின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளாமல் இருந்துள்ளதை கண்டு சந்தேகமடைந்த பக்கத்து தோட்டத்து விவசாயி அவரை தேடிய போது கிணற்றில் சடலமாக இருந்தது தெரியவந்தது.
மேலும், அவரது உடமைகள் மற்றும் யானையின் கால் தடம் இருந்தது கிணற்றின் அருகே கிடந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை வனத்துறையினர் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உயிரிழந்த ரங்கசாமியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரபட்ட பின் அவரது மகள் ஹரிப்பிரியா மற்றும் மனைவி ஜமுனா ஆகியோர் ரங்கசாமியின் கண்களை தானமாக அளிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களிடம் ஒப்புதல் பெற்று கண்களை பெற்றனர்.
மேலும் உயிரிழந்த ரங்கசாமியின் குடும்பத்திற்கு ஈமக்காரியங்களை நடத்த வனத்துறை சார்பில் 25,000 ரூபாயினை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ், மாநிலங்களை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் வழங்கினர்.