உதகை அருகே கீழ் கோத்தகிரி செல்லும் சாலையில் 150 மீட்டர் சுற்றளவில் மூன்று அடி ஆழத்திற்கு பூமி உள்வாங்கியதால் பரபரப்பு

நீலகிரி: உதகை அருகே கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் செல்லும் சாலை மெட்டுக்கல் பகுதியில் 150 மீட்டர் சுற்றளவில் மூன்று அடி ஆழத்திற்கு பூமி உள்வாங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: உதகை அருகே கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் செல்லும் சாலை மெட்டுக்கல் பகுதியில் 150 மீட்டர் சுற்றளவில் மூன்று அடி ஆழத்திற்கு பூமி உள்வாங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



மேலும், அவ்விடத்தில் பூமி சுமார் மூன்று அடி அளவிற்கு உள்வாங்கி உள்ள நிலையில், அப்பகுதியில் இருக்கும் மரம், தேயிலைச் செடிகள், பாறைகள் அனைத்தும் சரிந்துள்ளது. இதனைக் கண்டறிய புவியியல் துறை ஆய்வு நடத்த முடிவுசெய்துள்ளது. 



இதன் காரணமாக ஐந்து கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்த நிலையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் கீழ் கோத்தகிரி அடுத்த சோலூர் மட்டத்திலிருந்து கரிக்கையூர், பங்களா பாடி போன்ற பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் மெட்டுக்கல் சாலையை சுற்றி சுமார் 150 மீட்டர் பரப்பளவில் பூமி உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்ததால் நிலத்தில் பிளவு ஏற்பட்டு பூமி உள்வாங்கியதா ? அல்லது நில அதிர்வால் பூமி உள்வாங்கியதா? என்பதை கண்டறிய மாவட்ட நிர்வாகம் புவியில் துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

சுமார் 150 மீட்டர் பரப்பளவில் பூமி உள்வாங்கி இருப்பது சோலூர் மட்டம், கீழ் கோத்தகிரி பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...