கோவையில் வீட்டின் ஜன்னலில் துப்பட்டாவை வைத்து விளையாடி கொண்டிருந்த சிறுவன்; கழுத்து இறுகி பலியான சோகம்

கோவை: கோவை உக்கடம் அருகே வீட்டு ஜன்னலில் சுடிதார் துப்பட்டாவை மாட்டி விளையாண்டு கொண்டிருந்த சிறுவன் கழுத்து இறுகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை உக்கடம் அருகே வீட்டு ஜன்னலில் சுடிதார் துப்பட்டாவை மாட்டி விளையாண்டு கொண்டிருந்த சிறுவன் கழுத்து இறுகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் காவல் எல்லைக்குட்பட்ட ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த சதாகத்துல்லாவின் மகன் காஜா உசேன் (10). இவர் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் காஜா உசேன் பள்ளி முடிந்து வந்து வழக்கம் போல வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.

அதேபோல சிறுவனின் சகோதரி வீட்டில் தூய்மைப் பணியில் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் பெற்றோர் யாரும் இல்லாத நிலையில், சிறுவனின் கழுத்தில் துப்பட்டா இறுக்கிய நிலையில் மயக்கத்தில் இருந்தார். இதை தொடர்ந்து பெற்றோர் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் பலியானது தெரிய வந்துள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...