நீலகிரியில் புலி தாக்கி பசுமாடு பலி; அகழி மற்றும் மின் வேலி அமைத்து இழப்பீடு வழங்க கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாட்டினை புலி கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாட்டினை புலி கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட குனில் வயல் பகுதியில் விவசாயி கல்யாணி என்பவரின் பசுமாட்டை நேற்று நள்ளிரவில் வந்த புலி கடித்து கொன்றுள்ளது. நேற்றிரவு ஒரு மணி அளவில் மாடு அலறும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த போது, புலி ஒன்று தொழுவத்தில் கட்டியிருந்த பசுமாட்டின் கழுத்தை கவ்வி பிடித்து இழுப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து சத்தமிட்டதும் புலி அருகில் உள்ள புதரில் மறைந்து உள்ளது. சிறிது நேரம் கழித்து புலி மீண்டும் வந்து மாட்டை இழுக்க முயற்சி செய்துள்ளது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி புலியை விரட்டி உள்ளனர்.

இதுகுறித்து அதிகாலையில் வனத்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்களது கிராமத்தை ஒட்டி முதுமலை வனப்பகுதி உள்ளதாலும் முறையாக அகழி பராமரிக்கப்படாததால் அடிக்கடி யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. இந்த அகழியை முறையாக அகலப்படுத்தி பராமரித்து, மின் வேலி அமைத்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியும் என்றனர்.

வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக இப்பகுதியிலுள்ள குனில்வயல், வடவயல், ஏச்சம்வயல், புத்தூர் வயல், தொரப்பள்ளி, மொளப்பள்ளி பகுதிகளில் வாழும் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். மேலும் வன விலங்குகள் தாக்குதலில் காயமடையும் மற்றும் இறக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கு வனத்துறை வழங்கும் இழப்பீட்டை காலம் தாழ்த்தி வழங்காமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பசு மாடுகளை வைத்து பால் கறந்து வருமானம் ஈட்டி குடும்பங்களை காத்துவரும் விவசாயிகளுக்கு, வனவிலங்கு தாக்குதல்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு, மற்ற மாநிலங்களை விட இங்கு குறைவாகவே உள்ளதாக தெரிவித்த அவர்கள், இதனை நியாயமான முறையில் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...