சுற்றுச்சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்து அல்ல, ஆளுங்கட்சியின் கொலை - முத்தரசன்

கோவை: மேட்டுப்பாளையத்தில் வீடுகள் மீது சுற்றுச்சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்து அல்ல, ஆளுங்கட்சியின் கொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் வீடுகள் மீது சுற்றுச்சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்து அல்ல, ஆளுங்கட்சியின் கொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட கிராமத்தில் உள்ள சுற்றுசுவர் குறித்து 1998ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வாழ்கின்ற தலித் மக்கள், கூலித்தொழிலாளர்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி நகராட்சி ஆணையரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் பழனிசாமி தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கையெழுத்துப் போட்டு மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் போட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.

20 அடி உயரம் வீட்டின் உரிமையாளர் வீட்டை காட்டிலும் உயரமானது. இந்த வீட்டைச் சுற்றிலும் அரண்மனைக்கு சுற்றுச்சுவர் போல் சுவர் அமைப்பதற்கு நகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளதா என்பதை நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் பொது மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் இவ்வளவு பெரிய இந்த சுற்றுசுவர் அமைப்பதற்கு கருங்கற்களால் சிமெண்ட், பில்லர், மணல் உள்ளிட்ட பொருட்கள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் குடங்களுடன் நகராட்சி நிர்வாகம் வீட்டு உரிமையாளருக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இதனால் தான் இப்பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கன மழையில் நனைந்து குடியிருப்புகள் வீடு சரிந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த 17 பேரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...