கோவை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்துள்ள வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு முழு உடன்பாடு எனவும் திமுக தேர்தலை தடை செய்ய சொல்லவில்லை, குளறுபடிகளை சரிசெய்து விட்டு தேர்தலை நடத்த சொல்கின்றது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மேட்டுப்பாளையம் நடூரில் வீட்டை விட உயரமாக துணிக்கடை உரிமையாளரின் வீட்டு மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது எனவும், இவ்வளவு பெரிய பிரமாண்டமான சுற்றுசுவர் எழுப்பும் போது பில்லர், பெல்ட் போடவில்லை, சிமெண்ட் பயன்படுத்த வில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்த உயரமான சுவர் குறித்து 1998ம் ஆண்டே மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்து இருப்பதாக தெரிவித்த அவர், 2018 அக்டோபர் மாதம் 13ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி பழனிச்சாமி தலைமையில் சுவரை அகற்ற வேண்டும் என 60 பேரிடம் கையெழுத்து பெற்று மனு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அரசின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்தாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு, சுவர் குறித்து புகார் எதுவும் வந்ததாக தெரியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கின்றார் என்றும் இதை அரசியலாக்குவதாக முதல்வர் பேசியிருக்கின்றார் என்று கூறிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனு மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினார்.
உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என தெரிவித்த அவர், இதற்கு காரணமான நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பாதிப்பிற்கு காரணம் சிவசுப்பிரமணியம் மட்டுமல்ல, அரசு நிர்வாகமும் காரணம் எனவும் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தது மோசமான செயல் என்றும் தடியடி நடத்த காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், காவல் துறையும், வருவாய்துறையும் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்காமல் எரியூட்டுவது என்பது ஏற்புடையதல்ல எனவும் இது போன்ற செயல்கள் சர்வாதிகார ஆட்சியில் தான் நடக்கும் என தெரிவித்த அவர், நடூர் பகுதியில் ஆதிதிராவிடர் காலனியின் அருகில் இருக்கும் ஓடையை மறித்தும் சுவர்கள் கட்டப்பட்டு இருக்கின்றது என்றும் ஓடையை மறித்து எழுப்பப்பட்டுள்ள சுவர் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தொழில் நெருக்கடியால் தொழில் முனைவோர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருப்பதாகவும் தெரிவித்த அவர், எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என ஆளும்கட்சி விரும்புகின்றது எனவும், அதற்காக குழப்பங்களை ஏற்படுத்துகின்றது என்றும் என்றார்.
மேலும், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, முதல் அமைச்சர் பழனிச்சாமியின் ஆணைக்கு இணங்க செயல்படுகின்றார் என கூறியவர், புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனவும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்துள்ள வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் பட்சிக்கு முழு உடன்பாடு என்றும் திமுக தேர்தலை தடை செய்ய சொல்ல வில்லை, குளறுபடிகளை சரிசெய்து விட்டு தேர்தலை நடத்த சொல்கின்றது என முத்தரசன் தெரிவித்தார்.