கோவை: தமிழ்நாட்டில் 100க்கு 16 திருமணங்கள் குழந்தை திருமணங்களாக இருக்கும் நிலையில், அது கோவை மாவட்டத்தில் 19.9 சதவீதமாக இருப்பதாக யுனிசெப் அமைப்பினர் தெரிவித்தனர்.

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த தோழமை அமைப்பு, யுனிசெப் மற்றும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அவை தொடர்பான செய்திகளை எவ்வாறு ஊடகவியலாளர்கள் அணுகுதல், ஆவணப்படுத்துதல், செய்தியாக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை உள்ளிட்டவை குறித்து ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெறும் 100க்கு 16 திருமணங்கள் குழந்தை திருமணங்களாக இருப்பதாகவும், அது கோவை மாவட்டத்தில் 19.9 சதவீதமாக இருப்பதாகவும் யுனிசெப் அமைப்பினர் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறும் 7 மாவட்டங்களில் கோவையும் ஒன்றாக இருப்பதாகவும், குழந்தை திருமணங்களை ஒழிக்க சமூக நலத்துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.