நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர் மழையின் காரணமாக வனத்துறை சார்பில் நேற்று தடை விதிக்கப்பட்டிருந்த லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் மீண்டும் அனுமதியளித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், பாறைகள் விழுந்தும், சாலைகளில் மரங்கள் விழுந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

குன்னூரில் தொடர் மழையின் காரணமாக லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை சார்பில் நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது, மேலும் வனத்துறை அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என்றும் தடையை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், குன்னூரில் மீண்டும் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்று காலை முதல் மழையின்றி காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மீண்டும் லேம்ஸ்ராக் மற்றும் டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.