கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அ.தி.மு.க அரசு தூங்கி விட்டதை காட்டுவதாகவும் போஸ்ட் மாடம் ரூம்பில் ஆட்சி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் ஏ.டி காலனியில் மாடி வீட்டின் சுற்றுசுவர் இடிந்து அருகில் இருந்த குடியிருப்புகளின் மீது விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனத்தை தெரியடுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்தை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய் தத் இன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேசிய அவர், சுற்றுசுவர் இடிந்து விழுந்தது விபத்தல்ல, இது ஒரு தனிமனிதன் நடத்திய கொலை 17 ஏழை குடும்பங்கள் கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்கள் இந்த சுவர் குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது போஸ்ட் மாடம் ரூமில் தமிழக அரசு தூங்கி கொண்டிருப்பதையே காட்டுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், பலமுறை புகார் அளித்தும் விபத்திற்கு காரணமானவர்கள் மீதும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதும் எடுக்காமல் அ.தி.மு.க அரசு சம்பவம் நடந்தால் மட்டுமே எழுந்து வந்து நிவாரணம் மட்டும் வழங்கி விட்டு அடுத்த நிகழ்வுக்காக காத்திருப்பதாக சஞ்சய் தத் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது அளித்துள்ள நிவாரணத்தை 25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தினார்.