கோவை: வால்பாறை அடுத்துள்ள சின்னகல்லார் பகுதியில் தேயிலை தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் மூன்று வீடுகளின் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தின.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சின்கோனா தேயிலை தோட்டம். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனத்தின் கீழ் லாசன் டிவிசன் மற்றும் ரயான் டிவிசன் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்குள்ள சின்னகல்லார், பெரியகல்லார் பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் அங்கு இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி தொழிலாளர்களின் குடியிருப்புகளை தாக்கி சேதப்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாக சுற்றி வருகின்றன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 5 காட்டு யானைகள் அடங்கிய கூட்டம், சின்னகல்லார் அணை அருகில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மூன்று வீடுகளின் ஜன்னல் கதவுகளை உடைத்து, வீட்டின் உள்ளே இருந்த பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தின.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் தொடர்ந்து தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலேயே முகாமிட்டிருப்பதால் மீண்டும் இரவு தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர். வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.