கனரா வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த இடைத்தரகர் தாக்கப்பட்ட சம்பவம்; வீடியோ காட்சிகள் வெளியீடு

கோவை: கோவை ராமநாதபுரம் சுங்கம் அருகே உள்ள கனரா வங்கியில் கடன் வாங்கி தருவதாக இடைத்தரகர் 3 லட்சம் பெற்றுக்கொண்டு காலதாமதம் செய்து வந்த நிலையில், அவர் மேலாளர் உடன் பேசிக்கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர், வங்கிக்குள் புகுந்து அவரையும் மேலாளரையும் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை: கோவை ராமநாதபுரம் சுங்கம் அருகே உள்ள கனரா வங்கியில் கடன் வாங்கி தருவதாக இடைத்தரகர் 3 லட்சம் பெற்றுக்கொண்டு காலதாமதம் செய்து வந்த நிலையில், அவர் மேலாளர் உடன் பேசிக்கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர், வங்கிக்குள் புகுந்து அவரையும் மேலாளரையும் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை ராமநாதபுரம் சுங்கம் அருகே கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் நேற்று காலை பதினொன்றரை மணியளவில் உள்ளே புகுந்த நபர் ஒருவர் மேலாளர் அறைக்குள் சென்று மேலாளருடன் பேசிக்கொண்டிருந்த இடைத்தரகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை தலைமை மேலாளர் சந்திரசேகரன் தடுக்க முற்பட்டபோது அவரையும் தாக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து வங்கிப் பணியாளர்கள் அவரை பிடிக்க முற்பட்டபோது, கத்தி மற்றும் துப்பாக்கியைக் காண்பித்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார், தாக்குதல் நடத்திய வெற்றிவேலன் என்பவரை கைது செய்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இடைத்தரகர் குணபாலன் என்பவர் வெற்றிவேலனிடம் லோன் வாங்கி தருவதாக 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், தொடர்ந்து காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குணபாலனை வெற்றிவேலின் பின்தொடர்ந்து வந்த போது அவர் வங்கிக்குள் சென்று மேலாளர் உடன் பேசிக் கொண்டிருந்தார்.



இதனை கண்டு ஆத்திரமடைந்த வெற்றிவேலன், அறைக்குள் சென்று குணபாலனை தாக்கியுள்ளார். அப்போது, அவரை தடுக்க முற்பட்ட வங்கி மேலாளர் சந்திரசேகர் மீதும் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், லோன் பெற்றுத்தருவதாக தொடர்ந்து ஏமாற்றி வந்த நிலையில் ஆவேசத்தில் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள வெற்றிவேலன் கையில் துப்பாக்கி மற்றும் கத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...