கோவை: டவுன்ஹால் ராஜவீதியில் தனியாருக்குச் சொந்தமான பேக் கடை இயங்கி வருகிறது. கடையின் மேற்புறத்தில் கடைக்குச் சொந்தமான குடோன் ஒன்றில் பேக்குகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கோவை: டவுன்ஹால் ராஜவீதியில் தனியாருக்குச் சொந்தமான பேக் கடை இயங்கி வருகிறது. கடையின் மேற்புறத்தில் கடைக்குச் சொந்தமான குடோன் ஒன்றில் பேக்குகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை குடோனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அங்கு திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக ஆயிரக்கணக்கான மதிப்பிலான பேக்குகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்து குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.