17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கோவை நீதிமன்றத்தில் சரண் ;- வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

கோவை: சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது உறவினரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 26ம் தேதி அந்த சிறுமி அவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட தனது காதலனுடன் அதே பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த கார்டனுக்குள் இருந்த கும்பல் 17 வயது சிறுமியின் காதலரை நிர்வாணப்படுத்தித் தாக்கியுள்ளனர். அத்துடன் அந்த இளைஞரை புகைப்படமும் எடுத்துள்ளனர். பிறகு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தரப்பில் கடந்த 28ம் தேதி ஆர்.எஸ்,புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுல் (21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28) மற்றும் நாராயண மூர்த்தி(30) ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் கார்த்தியை தீவிரமாக தேடிவந்தனர்.



இப்படியிருக்க தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மணிகண்டன் என்பவர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று காலை 11.30 மணியளவில் சரணடைந்தார்.

இந்த ஜாமீன் வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா வரும் 17ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது 5U READ WITH 9G - பொது இடத்தில் ஆடைகளின்றி மோசமாக பாலியல் வன்கொடுமை செய்வது, 6 read with 7, 10 - பாலியல் துன்புறுத்தல், 13 read with 14 - ஆடைகள் இன்றி ஆபாசமாக மொபைலில் காட்சிப்படுத்துதல், 17 - கூட்டாக குற்றத்தை செய்ய தூண்டுதல் என 4 பிரிவுகள் போக்ஸோ சட்டத்தின் கீழும் , இந்திய தண்டனைச் சட்டம் 354 - மானபங்கம் படுத்துதல், 506(2) - கொலை மிரட்டல் 6 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இதில் முக்கிய குற்றவாளி மணிகண்டன் காவல்துறையில் சேர தொடர்ந்து முயற்சி எடுத்து வந்ததாகவும் அதற்குள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான கார்த்திக் என்பவரை போலீசார் விரைந்து கைது செய்ய முயற்சி செய்து வருவதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...