கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன் உள்ளிட்டோரை வருகின்ற 17ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுக்கரை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ரிஹானா பர்வீன் உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு காரணமான சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன் உள்ளிட்ட 24 பேரை காவல் துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிட கட்சி தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 பேரையும் வருகின்ற 17ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுக்கரை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ரிஹானா பர்வீன் உத்தரவிட்டார்.