மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் ஏ.டி.காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுசுவர் இடிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 



இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இன்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின், சுவர் பழுதடைந்துள்ளது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம், மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்து இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்படாது என்றும் அரசு, அமைச்சர், அதிகாரிகளின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறிய அவர், திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும், இறந்தவர்களின் உடலை திருட்டுத்தனமாக பிரேதப்பரிசோதனை செய்து இருந்து எரியூட்டி இருக்கின்றனர் என குற்றம்சாட்டிய அவர், உடலை உரியவர்கள் வாங்க மறுத்து உறவினர்களோடு பொதுமக்களும் போராட்டம் நடத்திய நிலையில், போராடியவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர்.

இதில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.4 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல, அதை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன், வீடு கட்டித்தர வேண்டும் என்றார்.

மேலும், விபத்திற்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது வெட்கக்கேடானது என்றும் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...