தொடர் கனமழையால் உதகையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்; பொதுமக்கள் கடும் அவதி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் உதகை அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் வியாபார கடைகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் மழை நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் உதகை அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் வியாபார கடைகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் மழை நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மேலும், கடைகளில் தேங்கியுள்ள மழை நீரால் அத்தியாவசிய பொருட்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. நீலகிரியில் இன்று காலை வரை 790.8 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளது. குறிப்பாக குன்னூரில் அதிக பட்சமாக 132 ம.மீட்டர் மழையும், காேடநாட்டில் 107 ம.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு மேல் நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.



வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்டைந்துள்ளனர். குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்பாேது மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதாலும் பாறைகள் விழுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

இதேபோல், மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் வாகனத்தை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...