கோவை: மேட்டுப்பாளையத்தில் நேற்று உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாதிய அமைப்பு கூட்டமைப்பினர் 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் மாடி வீட்டின் சுற்று சுவர் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளின் மீது விழுந்த கோர விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அரசு வேலை, வீட்டு உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இறந்தவரின் குடும்பத்தினரை ஒன்று சேர்த்து நேற்று தமிழ் புலிகள், திராவிட தமிழர் கட்சி, விடுதலை முன்னணி உள்ளிட்ட சாதிய அமைப்புகள் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவமனையை முற்றுகையிட்டு குவிந்தனர்.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் காவல்துறையினர் பேச்சு நடத்தியும் கலைய மறுத்ததால் சேலான தடியடி நடத்தினர். குறிப்பாக, இதற்கு காரணமாக இருந்த தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, சமத்துவ கழக தலைவர் வெண்மணி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஹரிமன்னன் உட்பட 25 பேரைக் காவல்துறை நேற்று கைது செய்த நிலையில், அவர்கள் மீது, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை மதுக்கரை நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.