கோவையில் காதலர்கள் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக் கொண்ட சம்பவம்: சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலர் கைது

கோவையில் காதலர்கள் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக் கொண்ட சம்பவம்: சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலர் கைது


கோவை: கோவை சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு அனுப்பிய அந்தரங்க புகைப்படத்தை காதலன் சமூகவலைதளத்தில் வெளியிட்டதையடுத்து போலீசார் காதலனை கைது செய்துள்ளனர்.

கோவை சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து கொண்டே இளம்பெண் ஒருவர் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு முகநூல் மூலமாக  இளைஞர் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது . இப்படியிருக்க இருவரும் செல்போன் மூலமாக அடிக்கடி சாட்டிங் செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியிருக்க, ஒரு நாள் இருவரும் சாட்டிங் செய்த போது இருவரும் அவர்களது அந்தரங்க

படங்களை பரிமாறிக் கொண்டனர்.

ஆனால், தனது காதலி தனக்கு அனுப்பிய புகைப்படங்களை  பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்ட காதலன், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து, காதலி தனது பெற்றோர் துணையுடன் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானலை சேர்ந்த அஜித் (19) என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் காதலி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரத்தில் அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் மீது போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 417, 506 (1), தகவல் தொழில்நுட்ப சட்டம் 6E, மற்றும் 67(A) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...