மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்; வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விபத்திற்கு காரணமான வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விபத்திற்கு காரணமான வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதி அருகே ஏ.டி காலனியில் இன்று அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் சிக்ஸ் கார்னர் பகுதியில் சாதிய அமைப்புகளை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் திடீரென மேட்டுப்பாளையம் உதகை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, அந்த சுவரை அப்புறப்படுத்தப் பல முறை கூறியும் அதனை அலட்சியப்படுத்தி விபத்தை ஏற்படுத்தி 17 உயிரைக் காவு வாங்கிய வீட்டின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர்.



இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...