மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்; சுற்றுச்சுவர் எழுப்பியவரை கைது செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுச் சுவரை எழுப்பியவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீடு 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுச் சுவரை எழுப்பியவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீடு 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் துணிக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான இடம் நடூரில் உள்ளன. இந்த இடத்தில் சுமார் 80 அடி நீளத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் ஒரு சுற்றுச் சுவரை அதன் துணிக் கடை உரிமையாளர் எழுப்பி இருக்கிறார். இந்த சுற்றுச்சுவர் பாதுகாப்பில்லாத நிலையில், சரியான அடித்தளம் அமைக்காத வகையில் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த இடத்திற்கு நெருக்கமாக அருந்ததியர் மக்கள் வாழ்வதால் தீண்டாமை மனப்பான்மையின் காரணமாகவே இந்த சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டதாக அப்பகுதியில் வாழும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தீண்டாமை சுவர் என்று அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு போராட்டம் நடத்தி அரசு அலுவலர்களிடம் புகாரும் அளித்துள்ளனர். 

இந்த சுற்றுச்சுவரினால் அந்தப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்கள் குடியிருப்புகளுக்கு மழைக்காலத்தில் மிகப் பெரிய சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றது. தீண்டாமை உணர்வின் காரணமாக எழுப்பப்பட்ட இந்த பலமில்லாத சுற்றுச்சுவர் கனமழையில் நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள வீடுகளில் 17 பேர் தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டிருப்பதாக கூறினார். 

இந்த நிலையில், உயிர் இழப்புகளுக்கு காரணமான துணிக்கடை அதிபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இது தீண்டாமை சுவர் என்று அருந்ததியர் மக்கள் போராட்டம் நடத்தியும் புகார் அளித்தும் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீடு 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...