கோவை: கோவை வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட மூதாட்டியை கொலை செய்த விவகாரத்தில் ஆய்வாளர் செந்தில்குமார் உரிய புலனாய்வு செய்யாத காரணத்தினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தற்போது நியமிக்கப்பட்ட தனிப்படை குழுவினர் கொலைக் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

கோவை வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட சலீவன் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மனைவி ரங்கநாயகி (80). இவர் கடந்த ஜூன் 18ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து சுப்பிரமணியம், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், மூதாட்டி மரணம் குறித்த விசாரணை உரிய முறையில் நடத்தப்படாத நிலையில், மூதாட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் இந்த சம்பவத்தில் விரிவான விசாரணை நடத்தாத காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் அடங்கிய தனிப்படை குழுவினர் கொலை குற்றத்தில் தொடர்புடையவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இதைதொடர்ந்து, போலீசார் சந்தேகத்துக்கிடமான கட்டிட தொழிலாளி செந்தில்குமார் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டி ரங்கநாயகி வீட்டில் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு, மது குடிக்க நகையை பறிக்க முற்பட்டபோது மூதாட்டி கூச்சலிட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் குமாரை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.