கோவை: கோவை மாநகராட்சியில் ரூ.7.41 கோடி மதிப்பிலான தெற்கு மண்டல புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, 37 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சூலார் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், கோயம்புத்தூர் மாநகராட்சியில் கருணை அடிப்படையில் வாரிசு தார்களுக்கான பணி நியமன ஆணைகளை இளநிலை உதவியாளர் தட்டச்சர், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், ஆகிய பணியிடங்களுக்கான ஆணைகளை 37 பேருக்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், இவ்வலுவலகத்தில் உதவி ஆணையாளர், மண்டலத் தலைவர், கூட்ட அரங்கு, உதவி நாவாகப் பொறியாளர், உதவி நகரமைப்பு அலுவலர், நிர்வாக அலுவலர், மண்டல சுகாதார அலுவலர், உதவி வருவாய் அலுவலர், இளம் பொறியாளர் பிரிவு, மண்டல நில அளவையா் அறை, தணிக்கைப் பிரிவு, வரி வசூல் பிரிவு, பொதுப் பிரிவு, பதிவறை, கணினி அறை, வரி வசூல் மையம் மற்றும் நவீன அடிப்படை வசதிகள் கொண்ட கழிப்பிடம் ஆகியவற்றுடன் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 18,881 சதுரடி பரப்பளவில் தரைதளம் 10,228 சதுரடி, முதல் தளம் 8653 சதுரடி அலுவலக கட்டிடம் இன்று 01.12.2019 பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் பொதுமக்கள் அமர்ந்து வழிசெலுத்துவதற்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது. அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்துத் தகுந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூரில் முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ரூ.168.00 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளது.
அதேபோல, ரூ.395.41 கோடி மதிப்பில் குறிச்சி, குனியமுத்தூர், துடியலூர், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி ஆகிய இடங்களில் குடிநா திட்ட அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3 கோடி மதிப்பில் குனியமுத்தூர் பகுதியில் சிறுவாணியிலிருந்து குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியும், ரூ.24.80 கோடி மதிப்பில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் மற்றும் புட்டுவிக்கி சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.11.80 கோடி மதிப்பில் புட்டுவிக்கி சாலை இணைப்பில் தடுப்புச்சுவர் மற்றும் தார்சாலை அமைக்கும் பணியும் முடிவுற்றுள்ளன.
இதுபோன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இவ்விழாவில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மண்டல உதவி ஆணையாளர்கள் செந்தில்குமார் ரத்தினம், மகேஷ்கனகராஜ், ம.செல்வன் செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.