கோவை: கா.க புதூர் சமுதாய நல பணிகளை உடனடியாக துவக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அனைத்து இளைஞர் மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை வட்ட அனைத்து இளைஞர் மாணவர் கூட்டமைப்பினர் இன்று தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது அறியாமல் மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஆனைமலை வட்டம் கா.க புதூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு ஆறு மாவட்டங்களில் சமுதாய நலக்கூட பணிகளுக்கு மூன்று கோடியே ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கா.க புதூர் சமுதாய நலகூடதிற்கு 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டுகளுக்கு மேல் ஆகியும், ஆளுங்கட்சியினர் தலையீட்டால் இந்த பணிகள் துவக்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினர்.
மேலும், சமுதாய கூட பணிகளை உடனடியாக துவக்கிட வேண்டும் எனவும் இல்லையெனில் பொதுமக்களோடு இணைந்து வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.