திருப்பூர்: எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வருடம் தோறும் டிசம்பர் ஒன்றாம் தேதி எய்ட்ஸ் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் லைப் என்னும் சமூக அமைப்பு சார்பில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் கலந்துகொண்ட பள்ளி கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும், எய்ட்ஸ் நோய் பரவாது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.