திருப்பூர்: திருப்பூரில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைப்பழ தார்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைப்பழ தார்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் தென்னம் பாளையம் மார்கெட் பகுதியில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கோபியை சேர்ந்த ராசு என்பவரது கிடங்கில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 டன் வாழைப்பழத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும், பழங்களில் ரசாயனங்கள் தடவியது தொடர்பாக பழ கிடங்கு உரிமையாளர் ராசு மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.