தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி பேசுகையில்,
வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 6
வேட்புமனு கடைசி நாள்: டிசம்பர் 13
வேட்புமனுக்கள் மீது பரிசீலனை: டிசம்பர் 16
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18
முதல்கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 27
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 30
வாக்குப்பதிவு நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2, 2020
ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 1,18,974 பதவி இடங்களை நிரப்ப நேரடித் தேர்தல் நடைபெறும். 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதேபோல் 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.