மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழப்பு 17ஆக அதிகரிப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் சுற்றுசுவர் இடிந்து மற்ற நான்கு வீடுகளில் மீது விழுந்ததில் வீட்டில் உரங்கி கொண்டிருந்தவர் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

ஏ.டி காலனி பகுதியில் உள்ள அருக்கானி, சின்னம்மாள், உள்ளிட்ட நான்கு பேர் வீடுகள் அடுத்தடுத்து உள்ளது. இந்த குடியிருப்பு அருகே மாடி வீடு ஒன்று இருந்துள்ளது. அதற்கு அருகே அந்த வீட்டின் சுற்று சுவர் 10 அடிக்கும் கட்டபட்டிருந்த நிலையில் நேற்று இரவு பெய்த கன மழைக்கு அந்த சுற்று சுவர் இடிந்து இந்த நான்கு வீடுகளின் மீது விழுந்தது. 



அப்போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் உடல் நசுங்கி மண் மூடியும் உயிரிழந்தனர். 



இதனையடுத்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஜே.சி.பி உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...