கோவை: கோவை வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இந்த குட்கா பொருட்கள், பயன்படுத்துபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகரை பான் மசாலா குட்கா பொருட்கள் பயன்படுத்தாத நகரமாக மாற்ற மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படை குழுவினர் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மறைமுகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர் .
இந்த நிலையில் இன்று வெரைட்டி ஹால் ரோடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பான்மசாலா குட்கா பொருட்கள் அதிக அளவில் பதுக்கப்பட்டு உள்ளதாக மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தனிப்படை குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவருடன் தனிப்படை உதவி ஆய்வாளர் கந்தசாமி மற்றும் இருபதுக்கு மேற்பட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த பிரமோத்குமார் (37) மற்றும் வினோத்குமார் (28) ஆகிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கோவை மாநகர் முழுவதும் குட்கா பொருட்களை ஒழிக்கும் நோக்குடன் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.