கோவை பள்ளிகளில் சைவ (வேகன்) உணவு குறித்து பிரச்சாரம்..!  மூளைச்சலவைக்கு இரையான 1.38 லட்சம் மாணவர்கள்

கோவை: கோவையில் விலங்குகள் நலன் என்ற பெயரில் நடந்த சைவ உணவு பிரச்சார மூளைச்சலவைக்கு ஒரு இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரையாகியுள்ளனர்.



கோவை: கோவையில் விலங்குகள் நலன் என்ற பெயரில் நடந்த சைவ உணவு பிரச்சார மூளைச்சலவைக்கு ஒரு இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரையாகியுள்ளனர்.

அதிர்ச்சியூட்டும் இந்த செயல் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் சிம்பிளிசிட்டியை தொடர்பு கொண்ட ஒரு மாநகராட்சி பள்ளி மாணவியின் பெற்றோர், தங்களது குழந்தை விந்தையாக நடந்து கொண்டிருப்பதாகவும், வீட்டில் வழக்கமான அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தனர். இதற்கு அக்குழந்தை படிக்கும் பள்ளியில் ஒரு நபர் விலங்குகளை படுகொலை செய்யும் வீடியோக்களை காட்டி, அசைவ உணவை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தியதே காரணமென கூறினர்.



இது தொடர்பாக பேசிய பெயரை வெளியிட விரும்பாத அக்குழந்தையின் தாய், “12 வயதான என் மகளுக்கு இரத்த சோகை உள்ளது. முட்டை, இறைச்சி உள்ளிட்ட இரும்பு சத்துள்ள உணவுகளை, உணவில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனடிப்படையில் நாங்கள் ஒரு ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், என் பெண் பருவமடையும் நிலையில் இருப்பதால் அவளுடைய உணவுகளை உறுதி செய்தோம். அவளுடைய இரத்த சோகை குணமடைந்து வந்த நிலையில், திடீரென அவளது உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றை உண்பதை தவிர்த்தாள். மேலும் ஏந்தவொரு உணவையும் சாப்பிடுவதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தாள். ஒரு கட்டத்தில் தட்டில் வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு உணவையும் சந்தேகிக்க ஆரம்பித்தாள். அதுமட்டுமில்லாமல், கடந்த காலங்களில் இவ்வளவு கோழி, ஆடு இறைச்சி, முட்டைகளை சாப்பிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியால் அழுது புலம்பினாள்."

"இந்த மாற்றத்திற்கு பள்ளியில் மேற்கத்திய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இறைச்சிக்காக விலங்குகளை சித்ரவதைப்படுத்தும் வீடியோக்களை காட்டி சில விலங்கு நல ஆர்வலர்கள் மேற்கொண்ட சைவ உணவு பிரச்சாரமே காரணம்” என அந்த தாய் தெரிவித்தார்.

தொடர்ந்து ”இது மதிய உணவில் உள்ள முட்டையை கூட ஏறிந்து விடும் அளவிற்கு சென்றுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் தொடர்பாக என் மகளுக்கு நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விளக்கினாலும், அவள் புரிந்து கொள்வதில்லை.  உணவு சங்கிலி எப்படி இயங்குகிறது என்பதை எடுத்துரைத்து, இவை அனைத்தும் தங்கள் விருப்பங்களை நம்மீது திணிக்க முயற்சிக்கும் சிலரின் சதி என்றேன். ஆனால் அவளோ, குல தெய்வ கோவிலில் இறைச்சியை படைத்து வழிபடுகிறோம் என்பதால் வழிபாட்டில் கலந்து கொள்ள மறுக்கிறாள். இது எங்களுக்கு  மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என அந்த ஏழை தாய் கண்ணீர் வடித்தார்.

ஒரு எளிய பொருளாதார பின்னணியை சேர்ந்த தாய், தனது மகளை மனதளவில் பாதித்த இப்பிரச்சனை தொடர்பாக கேள்வி கேட்க முடிவு செய்தாள். ஆனால் ஏற்படும் விளைவுகளை கண்டு பயந்தாள். அத்தாயின் துயரங்களைக் கேட்டு, இந்த விவகாரம் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். அதில் அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரு விலங்கு ஆர்வலர் வழக்கமான அமர்வுகள் நடத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. அவர் பள்ளிகளில் விளக்கக்காட்சிகள் மற்றும் அறிவியலற்ற தரவு மூலமாக சிறு குழந்தைகளுக்கு மறைமுக மற்றும் நேரடி வழிகளில் சைவ உணவை ஊக்குவித்து வருகிறார்.



அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள சொந்த ஒப்புதலின் படி, இதுவரை 1.38 லட்சம் மாணவர்களைச் சந்தித்து தனது கோட்பாட்டை கட்டாயப்படுத்தியதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் துணையோடு அரங்கேற்றம்
இதுபோன்ற ஒழுக்கமற்ற அமர்வுகள் அரசுப் பள்ளிகளில் கூட அனுமதிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாங்கள், முதன்மை கல்வி அலுவலர் பி.அய்யன்னனைத் தொடர்பு கொண்டோம்.



”கோயம்புத்தூரில் உள்ள எந்தப் பள்ளிகளிலும் அத்தகைய வகுப்புகளுக்கு அனுமதிக்கவில்லை என்றும், அத்தகைய அமர்வுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை” என்றும் அவர் கூறுகிறார்.

தொடர்ந்து "பள்ளிகள் இதுபோன்ற அமர்வுகளை ஊக்குவிக்கக் கூடாது, அத்தகைய நபர்களை பள்ளிக்குள் அனுமதிப்பதை நிறுத்த அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படும். கல்வியின் அடிப்படைக் கொள்கைகளை மீறும் எந்தவொரு பள்ளியும் கடுமையாக தண்டிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.



பள்ளிகளில் இத்தகைய அங்கீகரிக்கப்படாத அமர்வுகளை நடத்துவதற்கு இந்த நபர்களுக்கு எவ்வாறு அணுகல் கிடைக்கிறது என்பது பற்றிய எங்கள் விசாரணையின் போது, ​​மாநகராட்சி அதிகாரிகளுக்கு நெருக்கமான சமூக ஆர்வலர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

எப்படி நடக்கிறது இந்த
மூளைச்சலவை?

விஜய் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வி.அரவிந்தன் மற்றும் ஹீனா ஆச்சார்யா என்ற கோவையை சேர்ந்த ஒரு விலங்கு நல ஆர்வலரும் அந்த பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் விலங்குகள் சித்ரவதையை தடுத்தல் என்ற பெயரில் மறைமுகமாக சைவ உணவு பழக்கம் குறித்த தனது கருத்துக்களை பரப்பி வருகிறார்.



அவரது அமர்வுகளில், மேற்கத்திய நாடுகளில் வெகுஜன இறைச்சி உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்களை காட்டி, சில அறிவியலற்ற சைவக் கோட்பாடுகளை சொல்லி அசைவ உணவு உண்பவர்களிடம் ஒரு குற்ற உணர்வை உருவாக்குகிறார்.



அமர்வின் முடிவில், அசைவ உணவை சாப்பிடுவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக குழந்தைகளிடம் கையால் எழுதப்பட்ட பின்னூட்ட குறிப்புகளை பெற்று, சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்.
மூளைச் சலவை செய்து கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் உட்கொண்டிருக்கும் இறைச்சியை சாப்பிடுவதை நிறுத்துவதாக உறுதியளித்ததன் மூலம் குழந்தைகளை அவர்களின் பின்னூட்டத்தில் எழுதச் செய்கிறார்.

“நாங்கள் முன்பு மீன் மற்றும் கோழியை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு சுதந்திரம் இருப்பதைப் போலவே, விலங்குகளும் சுதந்திரத்திற்கு தகுதியானவை என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்” என்று ஒரு குழந்தை குறிப்பிட்டுள்ளது.




“அண்ணா, நீங்கள் சொன்னது நன்றாக இருந்தது. நாங்கள் இதுவரை பல விஷயங்களைச் செய்து கொண்டிருந்தோம். இதுவரை நாங்கள் நினைக்காத ஒன்றை நீங்கள் அழகாக விளக்கியுள்ளீர்கள். நாங்கள் இனி இறைச்சி சாப்பிட மாட்டோம்” என்கிறது ஒரு பின்னூட்டம்.

“இரவு உணவு, இனி இரவில் கோழி உணவு இல்லை” என்றது மற்றொரு பின்னூட்டம்.


அதிர்ச்சியூட்டும் வகையில், அவரது ஒவ்வொரு அமர்விலும் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், குறைந்தபட்சம் 4-6 ஆசிரியர்களுடன் குழந்தைகள் அமர்ந்து அவர் காட்டிய வீடியோக்களை ஆர்வத்துடன் கவனிப்பதைக் காட்டுகிறது.

நிபுணர்களின் கருத்து
கோயம்புத்தூரில் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமர்வுகள் என்ற பெயரில் பள்ளி குழந்தைகளை மூளைச் சலவை செய்யும் சைவ உணவு பிரச்சாரம் செய்பவர்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற அமர்வுகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒரு நபரின் உரிமைகள் சம்பந்தப்பட்ட கருத்துக்களுக்கு இதுபோன்ற எதிர்மறையான தனிப்பட்ட கோட்பாடுகளை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் இதுபோன்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், குழந்தைகளின் மனதில் இதுபோன்ற மன சித்திரவதைகளை ஏற்படுத்தியதற்காக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உளவியல் பிரச்சினை


"இதுபோன்ற அமர்வுகளை அனுமதிக்கும் பள்ளிகள் மற்றும் பெரிய அளவிலான இறைச்சி தொழிற்சாலைகள் இறைச்சியை வெட்டுவதைக் காட்டும் வீடியோக்களைப் பார்க்க குழந்தைகளை கட்டாயப்படுத்துவது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மாதவிடாய் சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்தும்போது கூட, குழந்தைகளுக்கு உண்மையான இரத்தம் காட்டப்படுவதில்லை, இதுபோன்ற சூழ்நிலையில் குழந்தைகளுக்கு இதுபோன்ற மூல காட்சிகளைக் காண்பிக்கும் ஒரு சலுகை பெற்ற சிலரின் வக்கிரமான சார்புகளுக்காக அவர்களின் மனதில் நிரந்தரமாக வடு மற்றும் உளவியல் ரீதியாக ஒரு குற்றத்தை ஏற்படுத்துகிறது. உணவுச் சங்கிலி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான தவறான கண்ணோட்டத்தை அவர்கள் நிச்சயமாகப் பெறுவார்கள். இறுதியில், இந்த அமர்வுகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள் அசைவ உணவு உண்ணும் ஒவ்வொரு மனிதனையும் ஒரு கொலைகாரனாக கருதுவார்கள். மற்ற விலங்குகளைப் போலவே நாமும் உணவுச் சங்கிலியின் ஒரு பகுதியாக இருக்கிறோம் " என்று ஒரு புகழ்பெற்ற பள்ளியின் கல்வியாளர் தெரிவித்தார்.

குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது

இது பள்ளி மட்டத்தில் ஒழுக்கக்கேடான செயல் என்று விமர்சித்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, குழந்தைகளுக்கான அறிவியல் மனநிலையை உருவாக்குவதைத் தடுத்து நிறுத்துவதால், அது நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றார்.
தொடர்ந்து "இந்திய அரசியலமைப்பின் 51 ஏ பிரிவின்படி, உணர்ச்சிபூர்வமாக வழியில் மூளைச் சலவை செய்யப்பட்டால், குழந்தைகள் ஒருபோதும் அறிவியல் மனநிலையை கற்றுக்கொள்ள முடியாது. இது அசைவ உணவு உண்பவர்கள் மீது அவர்களின் இதயத்தில் வெறுப்பை உருவாக்கும், மேலும் பள்ளி வேறு வழிகளில் பாகுபாட்டை உருவாக்குகிறது. இது பிரிவு 17 ஐ மீறுவதாகும். இதுபோன்ற ஆட்கள் நாடு முழுவதும் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், சிறுமிகள் மீதான  பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை குறித்து அக்கறை எடுத்து ஏன் குரல் எழுப்புவதில்லை” என கேள்வி எழுப்பினார்.

"அவர்கள் கொடுமைகளுக்கு எதிராக நிற்கவும், ஜங்க் உணவை சாப்பிடுவதை நிறுத்தவும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். மாறாக, அவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலை மிகவும் மறைமுகமாக புகுத்துகிறார்கள், இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நிறுத்த அரசு அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதுபோன்ற யோசனைகள் அல்லது மூளைச் சலவை அமர்வுகளுடன் யாராவது பள்ளிகளை அணுகினால், பள்ளிகளின் நிர்வாகிகள் அவர்களின் நோக்கம் மற்றும் நிகழ்ச்சி நிரலை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும்”. என்றார்.

இரையாகும் பிஞ்சுகள்
இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது என்று கூறிய குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஏ.தேவனேயன், தனிப்பட்ட கருத்துக்களை குழந்தைகள் மீது கட்டாயப்படுத்தப்படக்கூடாது, ஏனெனில் அது அவர்களுக்கு நீடித்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.

”இது சாதியத்திற்கு சமம், இது முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது. இது போன்ற கருத்துக்கள் மனிதநேயம் மற்றும் தீர்ப்பு மனப்பான்மை இல்லாத மனிதர்களை மட்டுமே உருவாக்கும்” என்று கூறிய அவர், ”சென்னையில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்த நிலையில், ஆர்வலர்களின் தலையீட்டிற்குப் பிறகு நிறுத்தப்பட்டது” என்றார்.

"ஒரு குடும்பமாக நாங்கள் என்ன சாப்பிடுவது என எங்களுக்குத் தெரியும்"

"அமர்வுகளை நடத்துவதில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டி அவர்களை சரியான நபர்களைத் தேடுவதற்கும், கலந்துரையாடலின் தலைப்புகளை ஆராய்வதற்கும் கண்மூடித்தனமாக உள்ளது. மதம், மொழி, உணவுத் தேர்வுகள் போன்ற பகுத்தறிவற்ற, அறிவியலற்ற மற்றும் உணர்ச்சி பூர்வமான விஷயங்களைப் பற்றி கல்வி நிறுவனங்களில் ஒருபோதும் எடுத்துரைக்க கூடாது. பெரும்பாலான மாணவர்கள் அவர்களின் சொற்பொழிவுகளுக்கும் தவறான கூற்றுக்களுக்கும் இரையாகி விடுவார்கள். குழந்தைகளை தங்கள் வீடுகளிலும், சுற்றுவட்டாரத்திலும் அச்சித்தாந்தங்களை பரப்புவதற்கு தூதர்களாகப் பயன்படுத்தலாம்", என ஒரு ஐந்து வயது குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர், "ஒரு குடும்பமாக நாங்கள் என்ன சாப்பிடுவது என எங்களுக்குத் தெரியும்", என்று கூறினார்கள்.

மருத்துவர்களின் எச்சரிக்கை,
இளம் வயதிலேயே சைவ உணவை திடீரென பின்பற்றுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பேசிய கோயம்புத்தூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஒய். ரதிப்ரியா, இறைச்சி உட்கொள்வதை நிறுத்திவிட்டால், குழந்தைகள் பி 12 குறைபாட்டில் மூழ்கக்கூடும் என்று தெரிவித்தார்.
"உணவு என்பது ஒரு தனிப்பட்ட தேர்வாகும், மேலும் சைவ உணவைப் பின்பற்றுபவர்களால் கூறப்படும் கூற்றுக்கள் பெரும்பாலும் விரிவுபடுத்தப்படுகின்றன. அசைவம் ஆரோக்கியமானது மற்றும் புரதம் நிறைந்தது. மக்கள் சைவ உணவைப் பின்பற்றினால், புரதத் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும். பி 12 வைட்டமின் குறைபாடு குழந்தைக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன, இது நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும், ”என்று அவர் கூறினார்.

ஆரிய சூழ்ச்சி

சில ஆர்வலர்கள் இதை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கும்போது, ​​இது ஒரு கலாச்சாரப் பிரச்சினை என்பதால் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று சேனாபதி கங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேயா சிவசேனாபதி கூறினார்.

"தமிழ்நாட்டில் சுமார் 97% மக்கள் இறைச்சி சாப்பிடுகிறார்கள், திராவிட மக்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து தென் மாநிலங்களிலும் சராசரி 98 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நமது மூளை வளர்ச்சி மற்றும் கல்வியைக் குறைப்பதற்கும், நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வருவதைத் தடுப்பதற்கும் இதுபோன்ற யோசனைகளை வடக்கிலிருந்து வந்த ஆரிய இனத்தவர்கள் பரப்புகிறார்கள்” என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில் பால் பொருட்களை வாங்க முடியாத சாதாரண மக்களின் புரதச்சத்து தேவைகளை இறைச்சி பூர்த்தி செய்தது, என்ற  கார்த்திகேயா சிவசேனாபதி, இதுபோன்ற கருத்துக்களை பரப்பும் மக்களை “போலி விலங்கு உரிமை ஆர்வலர்” என விமர்சித்தார்.

"இந்த மக்கள் கடந்த காலங்களில் எங்கள் கலாச்சாரத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர், இப்போது இதை எடுத்துக் கொண்டனர். எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று எங்களுக்குக் கற்பிக்க அவர்கள் யார்? இது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதால், இது எல்லா நிலையிலும் நிறுத்தப்பட வேண்டும். நாம் சாப்பிடும் விலங்குகள் நமக்கு உணவு ஆதாரமாக இருந்ததால் 2019 வரை பரிணாம பாதையில் இருந்து தப்பியுள்ளன என்று நான் சொல்லுவேன். வட இந்தியாவில் பூர்வீக விலங்குகளின் பல இனங்கள் அழிந்து வரும் கட்டத்திற்கு வந்துள்ளன. ஏனெனில் அவற்றை உட்கொண்டவர்கள் அவற்றை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள்” என்று அவர் கூறினார்.

கோயம்புத்தூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ”பள்ளிகளில் இதுபோன்ற செயல்களை அதிகாரிகள் அனுமதிப்பது என்பது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியை அழிப்பதாகும். குழந்தைகளின் நலனுக்காக இந்த செயல் கண்டிக்கப்பட வேண்டும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பதிலளிக்கவில்லை.

என்ன செய்ய வேண்டும்?

உணவு சங்கிலி அடிப்படையில் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்தை சார்ந்தே உள்ளன. மரங்களுக்கும் உயிர் உண்டு என பல அறிவியல் ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில், சைவ உணவு பழக்கம் என்பது ஒரு போலியான கோட்பாடாகும். இது ஒரு சிலரால் வாழ்க்கை முறை தேர்வாகக் கருதப்படுகிறது. நமது சொந்த பரிணாம முன்னேற்றம் கூட, இறைச்சி சாப்பிடுவது பரிணாம வளர்ச்சி அடைய காரணமாக இருந்துள்ளது.
ஒவ்வொரு நபருக்கும் சைவ உணவு பழக்கம் உள்ளிட்ட தனது சொந்த உணவுத் தேர்வுகளைப் பின்பற்ற உரிமை உண்டு.
என்றாலும், அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் உடல்நலம் மிகவும் சமரசம் செய்யக்கூடிய குழந்தைகளின் மீது அதைத் தள்ளுவது ஒழுக்கக்கேடானது, அரசியலமைப்பிற்கு ஏதிரானது மற்றும் நெறிமுறையற்றது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இறைச்சி உணவுகளில் மலிவாக கிடைக்கும் நிலையில், அதற்கு மாற்றான சைவத்தில் உள்ளவை விலை உயர்வனதாக இருக்கிறது. ஏழை பெற்றோர்கள் மீது இது தள்ளப்படும்போது, பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும்.
​மதிய உணவு திட்டத்தில் முட்டைகள் மூலம் பள்ளியில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு மாநிலத்தில், இந்த வகையான போலி செயல்பாடு நமது முன்னேற்றத்தின் இதயத்தில் தாக்குகிறது.

ஒரு தாய் இந்த பிரச்சினையை எழுப்பியதால் இந்த பிரச்சினை வெளிப்படையாக வெளிவந்துள்ளது, ஆனால் இப்போது இந்த பிரச்சனை நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்த ஆர்வலர் உரையாற்றிய குழந்தைகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும் போது, இதுபோன்ற எத்தனை குழந்தைகளும் பெற்றோர்களும் தங்கள் வீடுகளில் இத்தகைய போலி பிரச்சாரங்களுடன் போராடுகிறார்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்கு சைவ உணவை கட்டாயப்படுத்தி கொடுத்தற்காகவும், சில நேரங்களில் பெற்றோரின் இந்த முட்டாள்தனத்தில் குழந்தைகள் இறந்ததற்காகவும் பல நீதிமன்றங்கள் பெற்றோர்களை கண்டித்துள்ளன.

பள்ளிகளில் கற்பிக்க வேண்டியது நிறுவப்பட்ட உண்மைகளை தானே தவிர,  ஒரு சிலரின் விருப்பங்களும் கற்பனைகளும் கொண்ட கோட்பாடுகளை அல்ல. மேம்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் நிறுவப்பட்ட கருத்துக்கள் மூலம் குழந்தைகளிடையே ஒரு விஞ்ஞான மனநிலையை உருவாக்க அரசாங்கம் கடுமையாக உழைத்து வரும் அதே வேளையில், மக்களின் உணவுப் பழக்கம் குறித்த இந்த வகை போலி கோட்பாடுகள் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை மட்டுமல்ல, ஒழுக்கக்கேடானவை.

ஒரு நபர் 1.38 லட்சம் குழந்தைகளை தொடர்ச்சியாகவும், கட்டமாகவும் உரையாற்ற முடிந்தது என்பது குழந்தைகளின் கல்வியில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவமானமாக இருக்க வேண்டும். இந்த ஆர்வலரை அழைத்த பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இத்தகைய அமர்வுகளை அனுமதித்ததற்காக கண்டிக்கப்பட வேண்டும், மாவட்ட நிர்வாகம் தவறான மற்றும் விஞ்ஞானமற்ற பிரச்சாரத்தினை குழந்தைகளின் முன்வைத்த விலங்கு நல ஆர்வலர், அவரை பள்ளிகளுக்கு பரிந்துரைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமென நம்புகிறோம்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...