எய்ட்ஸ்  குறித்த  வாசகங்களை வரைந்த உடையை அணிந்து,  பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சமூக ஆர்வலர்

கோவை: எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து “சமூக பங்களிப்பின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்”ஆகும்.



கோவை: எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து “சமூக பங்களிப்பின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்”ஆகும்.

உலக எய்ட்ஸ் தினமான இன்று, எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்போடு கூடிய எச்சரிக்கையை ஏற்படுத்தும்,  வாசகங்கள் வரைந்த உடையை அணிந்து, ஆட்சியர் அலுவலகம் அருகே,  சமூக ஆர்வலர் ராஜா சேது முரளி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



ராஜா சேது முரளி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை புறக்கணிக்காமல், அவர்களை  அரவணைக்க வேண்டும். அவர்களை தொடுவதால் எய்ட்ஸ் நோய் பரவாது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்த கொசு, நம்மை கடித்தால் நோய் தொற்று ஏற்படாது எனவும், அவர்களிடம் பேசினாலோ , பழகினாலோ, உடன் சாப்பிட்டாலோ  எய்ட்ஸ் நோய் பரவக்கூடம் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்றார்.

பெற்றோர்களுக்கு எய்ட்ஸ் நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வராமல் தடுக்க மருந்துகள் இருப்பதாக கூறிய அவர், எய்ட்ஸ் இல்லாத தேசத்தை உருவாக்க கடந்த 20 வருடங்களாக எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, இந்தியாவில் தற்போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படாமல், தடுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அதிக வருடங்கள் வாழ, அரசு இலவச சிகிச்சை அளித்து இலவச மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...