கோவை: தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்ற சூழலில், உள்ளாட்சி தேர்தலைக் சந்திக்க அதிமுகவும், சமத்துவ மக்கள் கட்சியும் தயாராக உள்ளது எனவும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த பாக்யராஜ் கருத்து பெண் இனத்திற்கு எதிரான கருத்து இல்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்ககளை சந்தித்துப் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தடை கோரி வழக்கு போட அவர்களுக்கு உரிமை உண்டு, அதேசமயம், நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்ற சூழலில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுகவும் சமத்துவ மக்கள் கட்சியும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் வர வேண்டும் என்று கூறிய அவர், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்ததாகவும், பின்னர் மக்களை கேட்காமல் இருவரும் பிரிந்து ஆட்சி அமைத்தது தவறு என்றார்.
மேலும், எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க மக்களை கேட்ட பிறகு தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனவும் மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு தான் பெரும்பான்மை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல, மாவட்டங்களைப் பிரிப்பதன் மூலம் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்கும் எனவும் இது இரு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும் என கூறிய சரத்குமார், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதை தடுக்க சிறுவயதிலிருந்தே பாலியல் கல்வி என்பது அவசியம் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகளுக்கு சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்று கூறினார்.