பிரதமர் மோடி வரலாறு தெரியாமல் கோத்தபயா ராஜபக்சவின் அரசு வளர்ச்சிக்கு நிதியுதவி அளிப்பதாக வைகோ விமர்சனம்

கோவை: பிரதமர் மோடி வரலாறு தெரியாமல், லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தும் பெண்களை வன்கொடுமை செய்த கோத்தபய ராஜபக்சவின் அரசுக்கு, பயங்கர வாதிகளை எதிர்கொள்ள ரூ.350 கோடி ரூபாயும் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.2800 கோடியும் தர போகிறோம் என்று சொல்லியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.


கோவை: பிரதமர் மோடி வரலாறு தெரியாமல், லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தும் பெண்களை வன்கொடுமை செய்த கோத்தபய ராஜபக்சவின் அரசுக்கு, பயங்கர வாதிகளை எதிர்கொள்ள ரூ.350 கோடி ரூபாயும் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.2800 கோடியும் தர போகிறோம் என்று சொல்லியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்று, அதிபராக பதவியேற்றார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, கோத்தபயா ராஜபக்சே, நேற்று முன்தினம் மாலை டில்லி வந்தார். நேற்று, ஜனாதிபதி மாளிகைக்கு வந்த கோத்தபயாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வரவேற்றனர். இதன் பின், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், அணி வகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

மேலும், இலங்கையில், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், 3,150 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவிடம், பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

இந்த நிலையில், கோவை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இடிமேல் இடியாக இலங்கையில் தமிழினத்திற்கு அடிவிழுகிறது என்றும் பிரதமர் மோடி வரலாறு தெரியாமல் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து பெண்களைக் வன்கொடுமை செய்த கோத்தபயா ராஜபக்சவின் அரசுக்கு பயங்கர வாதிகளை எதிர்கொள்ள ரூ.350 கோடி ரூபாயும் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.2800 கோடியும் தருவதாக விமர்சனம் செய்தார்.

கொலைகார பாவிக்கு பட்டம் கொடுத்து, பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்று கூறிய அவர், கொலைகார கோத்தபயா ராஜபக்சேவுடன் கை குலுக்குவதற்காக, ஈழம் தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் மோடி காவு கொடுத்திருப்பது தாங்கமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இரக்கமற்றவரும், இதயமில்லாதவருமான மோடிக்கு மதிமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவிப்பதாக கூறிய அவர், உள்ளாட்சி தேர்தலுக்கு திமுகவும், திமுக தலைமையிலான அணியும் தயாராக இருக்கிறது. ஆனால், முழுமையாக வார்டு மறுவரையும் செய்யாமல் மாவட்டங்களைப் பிரிப்பதில் அதிமுக அரசு மும்மரம் காட்டுவதாக கூறினார். மேலும், மற்ற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் அதிகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடப்பது வேதனையளிப்பதாக வைகோ கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...