கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளை கரிசனையோடு வரவேற்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர் வேல் இன்று கண்ணீருடன் பணி ஓய்வு பெற்று வீடு திரும்பினார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளை கரிசனையோடு வரவேற்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர் வேல் இன்று கண்ணீருடன் பணி ஓய்வு பெற்று வீடு திரும்பினார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை உட்பட திருப்பூர், ஈரோடு நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல இங்கு தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இப்படி தினமும் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் குவியும் இந்த கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு சாதனைகளும் வேதனைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அதேபோல கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலும் சுகாதார சீர்கேடு, ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, மருத்துவர்களின் அலட்சியம், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது, ஆதரவற்ற நோயாளிகளை வெளியேற்றுவது, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
இப்படி தொடரும் குற்றச்சாட்டுகளை சரிசெய்ய, தொடர்ந்து மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தர வேல் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வந்துள்ளார்.
சிகிச்சையில் குறைபாடு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளை வேதனைபடுத்துவது, சிகிச்சையளிக்க மறுப்பது, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் வரும் நோயாளிகளின் உறவினர்கள் டாக்டர் சௌந்தர வேலை சந்தித்து தங்களின் கண்ணீரை துடைத்து நம்பிக்கையுடன்
சென்றுள்ளதை மருத்துவமனைக்கு வரும் பலரும் அறிவர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தின் சின்ன டாக்டர், கோவை அரசு மருத்துவமனையில் ஏழைகளின் டாக்டர்

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஆர்.சவுந்திரவேல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரில் 1990-ம் ஆண்டு பொது மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். 1991-ம் ஆண்டு அரசு மருத்துவப் பணியில் சேர்ந்த அவர், ஒத்தக்கால்மண்டபத்தை அடுத்த, அரிசிபாளையம் ஆரம்பசுகாதார நிலையத்தில் 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினார். அங்கு ‘சின்ன டாக்டர்’ என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு மக்களிடம் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றார்.
பின்னர், 2002-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை உதவி இருப்பிட மருத்துவ அலுவலராக பணியாற்றி அவர், 2015-ம் ஆண்டு இருப்பிட மருத்துவ அலுவலராக பதவி உயர்வு பெற்று தொடர்ந்து கோவையில் பணியாற்றி வந்தார்.
தனது பணிக்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து சிறந்த மருத்துவருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர, அவரின் சேவையைப் பாராட்டி பல தன்னார்வ அமைப்புகள், சங்கங்கள் மருத்துவ சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.
தினமும் 200 லிருந்து 250 நோயாளிகளின் உறவினர்களையும், முப்பதிற்கும் மேற்பட்ட காவலர்களையும், பல பத்திரிகையாளர்களையும், பல இயக்கங்கள், கட்சிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் சமாளித்து தேவையான சிகிச்சை உதவிகளை அளிக்கும் டாக்டர் சௌந்தர் வேல் இன்று மாலை பணி ஓய்வு பெற்று மருத்துவமனையிலிருந்து வெளியே செல்லும் பொழுது ஒரு ஆதரவும் இன்றி சென்றது காண்போர் நெஞ்சங்களை பதைபதைத்தது.

அதேபோல இவர் பணி நிறைவு பெறுகிறார் என்ற செய்தி தெரிந்த நாள் முதல் இன்று வரை பல ஏழை நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் இவரால் பலனடைந்த பலரும் கண்ணீர் மல்க நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து சென்றுள்ளனர்.

ஆனால், இன்று மாலை அவர் பணி ஓய்வு முடிந்து அவர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் போது குறைந்தபட்ச மனித நேயத்திற்காகவும், சக மருத்துவர் என்ற முறைக்காகவும் கூட மருத்துவர்களோ, செவிலியர்களோ, அல்லது பணியாளர்களோ என யாரும் இல்லாதது மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையில் மனித நேயம் இல்லையா..? என்ற கேள்வியை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தினமும் ஏழைகளை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய பொறுப்பான "ஆர் எம் ஓ" பொறுப்பிற்கு சிறந்த மருத்துவரும், சிறந்த திறமைசாலியும் தேவையில்லை என தெரிவிக்கும் பொதுமக்கள் நல்ல மனிதநேயம் உள்ளவரே தேவை என தங்களின் எதிர்பார்ப்பை அரசிடம் கோரிக்கையாக வைக்கின்றனர்.