சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பது ஜவுளித்‌ துறை வளர்ச்சிக்கு அவசியம்‌ - அமைச்சர்‌ செங்கோட்டையன்‌

ஈரோடு: சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பது ஜவுளித்‌ துறை வளர்ச்சிக்கு அவசியம் என ஈரோடு டெக்ஸ்வேளி ஜவுளி மையத்தில்‌ நடைபெற்று வந்த வீவ்ஸ்‌ 2019 என்ற விற்பனைப்‌ பொருட்காட்சியின்‌ நிறைவு விழாவில் அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தெரிவித்தார்.

ஈரோடு: சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பது ஜவுளித்‌ துறை வளர்ச்சிக்கு அவசியம் என ஈரோடு டெக்ஸ்வேளி ஜவுளி மையத்தில்‌ நடைபெற்று வந்த வீவ்ஸ்‌ 2019 என்ற விற்பனைப்‌ பொருட்காட்சியின்‌ நிறைவு விழாவில் அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தெரிவித்தார்.

ஈரோட்டில் உள்ள டெக்ஸ்வேளி ஜவுளி மையத்தில்‌ நடைபெற்று வந்த வீவ்ஸ்‌ 2019 என்ற விற்பனைப்‌ பொருட்காட்சியின்‌ நிறைவு விழாவில்‌ இன்று தமிழக பள்ளி கல்வித்‌துறை அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ கலந்து கொண்டார்.



அப்போது, பேசிய அவர்‌, முன்னெப்போதும்‌ இல்லாத சவால்களை சந்தித்து வரும்‌ ஜவுளித்‌துறை, தமிழக அரசு ஜவுளித்‌துறைக்காக உருவாக்கியுள்ள கொள்கை மற்றும்‌ திட்டங்களை பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ எனவும் தேவையான இடம்‌, தரமான தடை இல்லா மின்சாரம்‌, பயிற்சி பெற்ற பணியாளர்கள்‌ ஆகிய அனைத்தும்‌ நம்‌ மாநிலத்தில்‌ உள்ளன. இவற்றால்‌ ஜவுளித்துறை செழித்து வளர முடியும்‌ என்றார். அதே சமயம்‌, வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைப்பதற்கு இத்துறை சுற்றுச்‌ சூழல்‌ பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்‌ என்று பள்ளி கல்வித்‌ துறை அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தெரிவித்தார்‌.

நிகழ்ச்சியில்‌ பேசிய மின்சாரத்‌ துறை அமைச்சர்‌ பி. தங்கமணி, தமிழக ஜவுளித்‌ துறைக்கு பெரும்‌ போட்டியாக இலங்கை, வங்கதேசம்‌, வியட்நாம்‌ போன்ற நாடுகள்‌ உள்ளன. ஆனால்‌ தரத்தை அதிகரிப்பதன்‌ மூலம்‌ நம்மால்‌ சர்வதேச சந்தையில்‌ வெற்றி பெற முடியும்‌ என்று கூறினார்‌.

விழாவில்‌ சிறப்புரை ஆற்றிய சுற்றுச்‌சூழல் துறை அமைச்சர்‌ கே.சி.கருப்பண்ணன்‌, தமிழக அரசு ரூ.1000 கோடி செலவில்‌ ஏழு பொது கழிவுநீர்‌ சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க உள்ளது. சுமார்‌ எழுபத்தி ஐந்து சதவீத திட்ட செலவை மத்திய, மாநில அரசுகள்‌ மானியமாக வழங்கிவிடும்‌. மீதமுள்ள 250 கோடித்‌ தொகையில்‌ சுமார்‌ 200 கோடி ரூபாயை வட்டி இல்லா கடனாக தமிழ அரசு வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்‌ தொழில்‌ அதிபர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

டெக்ஸ்வேளி நிறுவனத்தின்‌ துணைத்‌ தலைவர்‌ சி. தேவராஜன்‌ பேசுகையில், டெக்ஸ்வேளி மற்றும்‌ இந்திய தொழில்‌ கூட்டமைப்பான சி.ஐ.ஐ. இணைந்து நான்கு நாட்கள்‌ நடத்திய வீவ்ஸ்‌ 2019 நிகழ்ச்சியில்‌ 250 நிறுவனங்கள்‌ தங்கள்‌ தயாரிப்புகளை காட்சிப்படுத்தியதாகவும் ரூ.900 கோடி அளவிற்கு வர்த்தகம்‌ நடைபெற்றதாக கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...