கோவை: இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ வட மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர்களுக்கென தனி அதிகார பகிர்வு அளிக்க, தனி மாநிலம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மேட்டுப்பாளையத்தில் தெரிவித்தார்.

உதகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று மேட்டுப்பாளையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரிக்கு அந்த கட்சியின் நகர தலைவர் தங்கமணி தலைமையில் கட்சி தொண்டர்கள் பேருந்து நிலையம் முன்பு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை தீர தமிழர்களுக்கு முறையான அதிகார பகிர்வு அளிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து புதிய மாநிலத்தை உருவாக்கி அதை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் இதனை இலங்கை அரசு நிறைவேற்ற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.
மேலும், தற்போது மோடி அரசாங்கத்தால் ஆறு ஆண்டுகளில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளதுடன் விவசாயம், வேலைவாய்ப்பு, தொழிற்சாலை உற்பத்தி குறைவு உள்ளிட்டவை இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா பின்னோக்கிச் சென்றுள்ளதாக கூறிய அவர், இதனை மூடி மறைக்கவே காஷ்மீர் விவகாரம், அயோத்தியில் ராமர் கோவில், மராட்டிய அரசியல் உள்ளிட்ட உணர்வு பூர்வமான விஷயங்களை தூண்டுவதாகவும் இதனை காங்கிரஸ் வண்மையாக கண்டிப்பதாக கூறினார்.
கடந்த 100 தினங்களாக முன்னாள் மத்திய அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் 100 நாட்களில் ஒரு லட்சம் கேள்விகள் கேட்டிருந்தாலும் அதற்கு அவர் பதில் அளித்திருப்பார், ஆனால் கேள்வியும் கேட்காமல் வெளியேயும் விடாமல் மத்திய அரசு அவரை வேண்டும் என்றே பழிவாங்கி வருவதாக தெரிவித்தார். சிதம்பரம் ஒன்பதரை லட்சம் லஞ்சம் வாங்கியதாக மத்திய அரசு கூறுகிறது. சிதம்பரம் இருபது ஆண்டுகள் இந்தியாவில் உள்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்துள்ளார், ஆனால் அவர் மீது சாட்டப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு ஜனநாயக படுகொலை மட்டுமல்ல, அப்பட்டமான பொய் வழக்கு என்று அவர் தெரிவித்தார்.