குன்னூர் சித்தகிரி சாய் சுகாதார மைய திறப்பு விழா; ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை நீலகிரி வருகை

நீலகிரி: குன்னூர் எடப்பள்ளி சித்தகிரி சாய் தர்மசேத்ராவில், புதிதாக கட்டப்பட்ட சித்தகிரி சாய் சுகாதார மைய திறப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தருகிறார்.

நீலகிரி:  குன்னூர் எடப்பள்ளி சித்தகிரி சாய் தர்மசேத்ராவில், புதிதாக கட்டப்பட்ட சித்தகிரி சாய் சுகாதார மைய திறப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தருகிறார்.

குன்னூர் எடப்பள்ளி சித்தகிரியில் சாய் தர்மசேத்ரா அமைந்துள்ளது. இங்கு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடப்பதுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தன்வந்தரி சுவாமிக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி நாளை (1ம் தேதி) குரு வந்தனம், தேவதா அனுக்ஞை, மகா கணபதி பூஜை, மகா சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடக்கின்றன.

டிசம்பர் 2ம் தேதி, அங்கு புதிதாக கட்டப்பட்ட சித்தகிரி சாய் சுகாதார மையமான இலவச மருத்துவமனையை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைக்கிறார். இதற்காக, கோவைக்கு காலை 10 மணிக்கு வரும் ஆளுநர் சாலை வழியாக குன்னூர் வந்து பகல் 12:30 மணிக்கு சுகாதார மையத்தை துவக்கி வைக்கிறார்.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...