மடிக்கணினி வழங்கக்கோரி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் மாணவிகள்

திருப்பூர்: திருப்பூரில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அரசுப் பள்ளி முன்னாள் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர்: திருப்பூரில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அரசுப் பள்ளி முன்னாள் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பெரிய கடை வீதியில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்து 300 மாணவியர் வரை வெளியேறியுள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மடிக்கணினி வழங்கக் கோரி கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்து வெளியேறிய சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவியர் இன்று காலை காங்கேயம் பஸ் டெப்போ முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர உதவி ஆணையர் நவீன்குமார் தலைமையிலான போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர்.



பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவிகளை கல்வி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாணவியர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் காங்கேயம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...