கோவை: பா.ஜ.க ஆறாண்டு காலத்தில் இந்த நாட்டை எவ்வளவு சீரழித்துள்ளது என்பதை இந்த பொருளாதார கொள்கை காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
கோவை: பா.ஜ.க ஆறாண்டு காலத்தில் இந்த நாட்டை எவ்வளவு சீரழித்துள்ளது என்பதை இந்த பொருளாதார கொள்கை காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து கோவை வந்த காங்கிரஸ் கமிட்டி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் கடந்த 6 ஆண்டுகளில் பொருளாதார நிலையில் மிக மோசமான நிலையில் நாடு உள்ளது எனவும் ஆறாண்டு காலத்தில் இந்த நாட்டை எவ்வளவு சீரழித்துள்ளது என்பதை இந்த பொருளாதார கொள்கை காட்டுவதாக தெரிவித்தார். பா.ஜ.க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்சே இந்த நாட்டின் தேச பக்தர் என்று பேசி உள்ளார், அப்படி என்றால் காந்தி யார் என கேள்வி எழுப்பினார். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, கேடான கட்சி பா.ஜ.க. என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் எனவும் எளிய பொருளாதார வழி தெரியாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்த மோடியால் இந்த நாடு வீழ்ச்சியை கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் அனைவருக்கும் அதிகார பகிர்வு வர வேண்டும் எனவும் தமிழர்களுக்கு தனி அதிகார பகிர்வு வழங்கிட இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபகசேவிற்கு மோடி அழுத்தம் தர வேண்டும் என்று கூறிய அவர், உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் வந்தால், நேரடி தேர்தல் தான் வேண்டும் எனவும் உள்ளாட்சி தேர்தலில் குளறுபடிகள் இருப்பதால் தி.மு.க. வழக்கு தொடர்ந்திருப்பது போல, அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளும் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்று கூறினார்.
மராட்டியத்தில் பா.ஜ.க. எப்படி ஆட்சி அமைத்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் எனவும் குடியரசு தலைவர், ஆளுநர்கள் தான் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும், ஆனால் அவர்கள் செய்ய தவறியதை உச்சநீதிமன்ற செய்திருப்பதாகவும் ஆளுநரை மூன்று மணிக்கு எழுப்பி ஆட்சி அமைக்க வேண்டி நிர்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், எப்படி மராட்டியத்தில் ஆட்சி அமைந்ததோ அதேபோல் கோவாவிலும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் என்று அவர் தெரிவித்தார்.