கோவை: கோவை கணபதி அருகே உள்ள லெனின் நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக பெற்றோர் திட்டியதால், மனமுடைந்து ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி அருகே உள்ள லெனின் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்திஸ்வரனின் மகன் அபினேஷ் (15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபினேஷ் நடந்து முடிந்த தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல டியூஷனுக்கு சென்ற அபினேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் அவரை அந்த பகுதி முழுவதும் தேடினர். அபினேஷ் கிடைக்காததை அடுத்து சரவணம்பட்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
பின்னர், பீளமேடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி சிறுவன் ஒருவர் இறந்து கிடப்பதாக வெளியான தகவலையடுத்து அபினேஷின் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். இதைத்தொடர்ந்து இறந்து கிடப்பது அபினேஷ்வர் தான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவனின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.