திருப்பூரில் கோவில் சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சி; போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகநாத சுவாமி திருக்கோயில் சுவற்றை துளையிட்டு உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகநாத சுவாமி திருக்கோயில் சுவற்றை துளையிட்டு உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டி அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு சொந்தமான திருமுருகநாத சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது. 



மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர்.



இந்நிலையில் இன்று காலை கோவிலுக்குள் சென்ற போது கோவிலின் அன்னதான உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இதனையடுத்து, அறநிலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டபோது, கோவில் சுவர் துளையிடப்பட்டது உண்மை எனவும் ஆனால், உண்டியலில் இருந்த பணம், நகை போன்ற எதுவும் கொள்ளை போகவில்லை என்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை துணியால் மூடிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அறநிலையத்துறைக்கும், தொல்லியல் துறைக்கு சொந்தமான கோவிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...